போதகர் ஒருவர் பிரசங்கம் செய்வதற்காக எழுந்து நின்றார். ஆனால் அவர் ஆயத்தம் செய்து மனதில் வைத்திருந்த பிரசங்கம் முற்றிலும் மறந்துபோயிற்று. எவ்வளவோ சிந்தித்தும், ஜெபித்தும் பார்த்தார்; பிரயோஜனமில்லை. திடீரென்று தானியேல் மூன்றாம் அதிகாரத்தின் நினைவுகள் மனதை நிறைத்தன. வேறு வழியின்றி, எல்லாருக்கும் தெரிந்த அந்த அனுபவத்தைக் கூறி, தேவன் ஆச்சரியபிரகாரமாகத் தன் பிள்ளைகளைப் பாதுகாப்பதை அந்த நாளின் செய்தியாக அளித்தார்.
அந்த சபையில் வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி, தேவனை ஏற்றுக் கொண்டபடியால் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். அவளுடைய கணவன் ஒரு பேக்கரி நடத்தி வந்தார். இந்த சகோதரி ஆலயத்துக்கு வருவதை அவன் வெறுத்தான். அன்று காலை இந்த சகோதரி ஆலயத்துக்குச் செல்லக் கூடாதென்று தடைவிதித்தான். அதையும் மீறிச் சென்றால், திரும்பி வந்தவுடன் அவர்களை பேக்கரியில் ரொட்டி சுடும் சூழையில் தள்ளிவிடுவதாகப் பயமுறுத்தினான். அந்த சகோதரி அதைப் பொருட்படுத்தாமல் ஆலயத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்தவும், ஆறுதல்படுத்தவுமே தேவன் அந்த செய்தியைக் கொடுக்கச் செய்தார். அதே வேளையில் மனைவி திரும்பி வந்தவுடன் அவளைக் கொலை செய்வதற்காக அடுப்பில் நெருப்புடன் காத்துக் கொண்டிருந்தான். தேவன் அவனுடைய உள்ளத்தில் மனைவியின் நற்குணங்களைக் குறித்து பேச ஆரம்பித்தார். கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிந்தது, மனைவி தேவனுடைய வார்த்தைகளால் ஆறுதல் பெற்றவளாக வீடு திரும்பினாள். கணவனிடம் நேராகச் சென்று தான் அக்கினியில் போடப்படுவதற்கு ஆயத்தம் என்று கூறினாள். அவளுடைய தாழ்மையும், தேவன்மேல் அவள் வைத்திருந்த ஆழமான பற்றும் அவனைக் கவர்ந்தன. அவன் மனம் மாறினான்.
நம்முடைய தேவன் ஆச்சரியமாய் இரட்சிப்பவர். நீங்கள் அக்கனிச் சூளை போன்ற துன்பங்களை சந்தித்து வந்தால் அவரையே நம்புங்கள், அவர் உங்களை விடுவிப்பார்.

Post a Comment