ஆலன் கார்டினர் என்பவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிஷனரிப் போதகராவார். ஒரு முறை கடலில் படகு மூலமாகப் பயணம் செய்யும்போது படகு மூழ்கியதில் மரணம் அடைந்தார். அநேக நாட்களுக்குப் பிறகு அவருடைய படகும், சடலமும் கரையில் ஒதுங்கின. அப்போது அவர் உபயோகித்து வந்த டைரி கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய மிஷனரி வாழ்க்கையில் அடைந்த துன்பங்கள், பசி, தனிமை, மனிதர்கள் கொடுத்த உபத்திரவங்கள் ஆகியவற்றை அவர் டைரியில் குறித்து வைத்திருந்தார். ஆனால் மரிப்பதற்கு முன்பாக அவர் கடைசியாக எழுதியிருந்த காரியம் "இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் தேவனுடைய அற்புத கரம் என்னைத் தாங்கி வழி நடைத்தியிருப்பதை நான் மீண்டும் மீண்டும் உணரமுடிகிறது. அதற்காக அவரை ஸ்தோத்தரிக்கிறேன்," என்பதே.

ஒரு வேளை நீங்கள் இப்போது பலவிதமான இன்னல்களுக்குள்ளாகக் கடந்து சென்று கொண்டிருக்கலாம். நினையாதவிதத்தில் உபத்திரவங்கள் வந்து கொண்டிருக்கலாம், ஆயினும் நீங்கள் தேவனுக்கு உண்மையாக இருந்தால், உங்களைத் தாங்கும் அவரது கரத்தை எப்பொழுதும் நீங்கள் உணரமுடியும். அதற்காக அவரை ஸ்தோத்தரியுங்கள். அவருடைய பாதுகாக்கும் கரம் மட்டும் இல்லாமல் போனல் நாம் எப்போதோ அழிந்து போயிருப்போம். அவருக்கே நன்றி

பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 2கொரி 11-27


Post a Comment

 
Top