ஸ்பர்ஜன் ஆலய ஆராதனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வாலிபன் வந்து வழிமறித்தான். "ஐயா எப்பொழுதும் அந்த வேத புத்தகத்திலிருந்து நீங்கள் பேசுகிறீர்களே, அந்தப் பழங்காலத்துக் கதை வேண்டாம். விஞ்ஞானத்திலிருந்து, நவீன கண்டுபிடிப்புகளிலிருந்து பேசுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்
பிரசங்கிக்க ஸ்பர்ஜன் எழுந்தார். விஞ்ஞானத்திலிருந்து நான் பேசும்படியாக கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு ஏழை விதவைத் தாய் தன் ஒரே மகனை மரணத்தில் இழந்து கண்ணீரோடு வந்திருக்கிறார்கள், விஞ்ஞானம் சொல்லுகிறது, அவர் சரீரம் அழுகும்; புழுக்கள் பிடிக்கும்; மக்கி மண்ணோடு சேர்ந்துவிடும் என்று !
ஆனால் விஞ்ஞானத்தால் சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இந்த ஏழைத்தாய் தன் மகனை மறுபடியும் காண்பாளா? இப்பொழுது அவன் உயிர் எங்கே இருக்கிறது? மரணம்தான் எல்லாவற்றிற்கும் முடிவா? விஞ்ஞானம் மௌனமாகி விடுகிறது. ஆனால் என் அருமை வேதமோ, எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து, உள்ளத்தை ஆறுதல்படுத்துகிறது.
இயேசு மரணத்தின்போது தன் ஆவியைப் பிதாவின் கைகளில் ஒப்புவித்தார் (லூக் 23:46). தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனிடம் "இன்றைக்கு
என்னோடுகூட பரதீசியிலிருப்பாய்" என வாக்குத்தத்தம் செய்தார். நாம் இந்த சரீரத்தைவிட்டு குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கிறோம் (2கொரி 5:8) என்று வேதம் சொல்லுகிறது.
விஞ்ஞானம் தராத, வாக்குத்தத்தங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்குத் தந்திருக்கிறார்.
"கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது. அவர்கள் தங்கள் பிரயாசங்களைவிட்டொழிந்து, இளைப்பாறுவார்கள்" (வெளி 14:13).
SOURCE FILE:www.christsquare.com
Post a Comment