தேவையான பொருட்கள் :
சர்க்கரை வள்ளி கிழங்கு - 500 கிராம்
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
நறுக்கிய முந்திரி பருப்பு - 1 தேக்கரண்டி
உலர் திராட்சை - 6
நறுக்கிய பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - ( தூளாக்கவும்)
பொடித்த வெல்லம் - 4 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை :
* சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து துருவிக்கொள்ளவும்.
* அத்துடன் பொடித்த வெல்லத்தை கலக்கவும்.
* வாணலியில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றை கொட்டி வதக்கவும்.
* அதை சர்க்கரை வள்ளி கிழங்கில் கலந்து பரிமாறவும்.
* இது குழந்தைகளுக்கு உகந்த மாலை நேர உணவு.
SOURCE FILE: MALAI MALAR
Post a Comment